கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகைகக்காக 642 மசூதிகள் தயார் நிலையில்!

640 masjid ready for eid prayers in qatar

கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகைகக்காக 642 மசூதிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகளைத் தவிர்ந்து பொதுப்பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் மற்றும் முக்கிய சுற்றுலா புள்ளிகளும் (picnic points) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக தயார் செய்யப்பட்டுள்ளதாக அவ்காப் அறிவித்துள்ளது.

நோன்புப் பொருநாள் தொழுகைக்கான உத்தியோக பூர்வ நேரமாக அதிகாலை 5.32 அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் ஒவ்வொரு முக்கிய நகரிலும், ஒன்றுக்கு மேட்பட்ட மசூதிகளும், மேலதிகமாக தைானங்கள் தொழுகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கத்தார் அதிபர் ஹமத் பின் அல்தானி அவர்கள் அல் வஜ்பா நகரில் அமைந்துள்ள மைதானத்தில் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நோன்புப் பெருநாள் எப்போது என்பது பற்றி முடிவுகள் எதிர்வரும் 09ம் திகதி மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கூடும் கத்தார் பிறைக்குழுவினால் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

மசூதிகளின் பட்டியலுக்கு – கிளிக் செய்க!

இதையும் படிங்க: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.32க்கு நடைபெறும்!

Leave a Reply