கத்தார் டிசம்பர் 18ம் திகதியை ஏன், எதற்கு தேசிய தினமாக கொண்டாடுகின்றது!

Qatar National Day 2023

  • கத்தார் ஓர் இறையான்மையின் முகவரி…..
  • வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மையிலே அவ்வாரு இருப்பதில்லை…
  • அந்நாட்டு மக்களுக்கு அது மத்திய கிழக்கின் சொர்க்கம்…
  • மத்திய கிழக்கு நாடுகளின் துணிச்சல் மிகுந்த நாடான கத்தார் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 18 தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

இவ்வாறு ஒரு நாளை விமர்சயாக கொண்டாடுவதற்கான காரணங்கள் என்ன என்று இங்கு பார்ப்போம்.

1878 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி, ஜசீம் பின் முகம்மத் அல் தானி தனது தந்தை முகமத் பின் தாணிக்கு பின்னர் கத்தார் தீபகற்பத்தின் ஆட்சியாளராகப் பதவியேற்றார். பிரிட்டனைப் போன்ற வெளிப்புற சக்திகளை எதிர்த்து அனைத்து உள்ளூர் பழங்குடியினரையும் ஒன்று திரட்டிய தலைவராக அவர் கருதப்படுகிறார். தீபகற்பத்தின் பழங்குடியினரின் நம்பிக்கை, விசுவாசம் என்பவற்றை தன் அளவு கடந்த சேவைகளின் மூலமும் நற்பண்பண்பு மற்றும் தைரியத்தின் மூலமும் தன்னாட்சி பெற்றார். உள்ளூர் மற்றும் குடியிருப்பாளர்களிடையே தேசிய அடையாள உணர்வை வளர்ப்பதில் இவரின் பங்கு அளப்பெரியது.. இது கத்தார் பாரம்பரியத்தின் அறிவு மற்றும் வர்த்தக பெருமையை மேம்படுத்த உதவியது. இவ்வாறு மக்கள் கோத்திரங்கள் ஓர் அணியாய் ஒன்ரு திரண்ட நாள் என்பதனாலே டிசம்பர் 18 கத்தார் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

கத்தார் சர்வதேச நாடுகளின் மீது அக்கறை கொண்ட நாடாகவும் கருதப்படுகிறது. அதனடிப்படையில் 2016ம் ஆண்டு சிரியா நாட்டு யுத்தம் காரணமாக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தேசிய தின நிகழ்வுகளை கூட கொண்டாடவில்லை. இதுவே உலகின் முதல் தடவை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்காக தேசிய தின நிகழ்வுகளை ரத்து செய்து துக்கம் அனுஷ்டிட்டது.

2017 ஜுன், காலப்பகுதியில் கத்தாருக்கு எதிராக சவூதி அரேபியா, துபாய், எகிப்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளால் கத்தார் அரசின் மீது தீவிரவாத்திற்கு ஆதரவான நாடு என குற்றம் சாட்டப்பட்டு அந்நாடுகளுடனான அரச தொடர்பு மற்றும் தரைவழி, வான்வழி போக்குவரத்து தொடர்புகளை துண்டடித்தன. அத்தடைகளையும் தாண்டி நாட்டின் பொருளாதாரத்தில் அபிவருத்தியை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நடந்தும் எந்தவொரு சந்தர்பத்திலும் கத்தார் தன் நாட்டு மக்களின் இறையான்மை பாதிக்கும் வகையில் நடந்திருக்கவில்லை. இதன் வழியே கட்டார் ஓர் இறையான்மையின் முகவரியாக புரிந்திருக்கின்றேன்.

நன்றி
கத்தாரிலிருந்து முர்ஸி…..

இதையும் படிங்க : கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 19ம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *