கத்தாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கத்தார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கத்தாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்துள்ளார்.
விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக விமான நிலையச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: Safety Officer – கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் வேலைவாய்ப்புக்கள்