வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான செய்தி

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்புத் தொகை ஒன்றை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதன்படி, தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.

உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

New incentive The Central Bank of Sri Lanka for foreign remittance New incentive The Central Bank of Sri Lanka for foreign remittance New incentive The Central Bank of Sri Lanka for foreign remittance

Also Read: கத்தார் விமான நிலையத்தின் பார்க்கிங் வசதிகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *