Qatar to ban single-use plastic bags
கத்தார் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி தலைமையில் நேற்று (25.05.2022) பிற்பகல் அமிரி திவானில் உள்ள அதன் தலைமையகத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் படி, நிறுவனங்கள், ஷாப்பிங்க சென்டர்களில் வழங்கப்படும் ஒரு முறை மாத்திரம் பயன்படும் பிளாஸ்டிக் உறைகளுக்கு (சொப்பின் பேக்) தடை விதிக்கப்படவுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பல முறை பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பைகள், மக்கும் பிளாஸ்டிக் பைகள், காகிதம் அல்லது “நெய்யப்பட்ட” பைகள் மற்றும் பிற மக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக செய்திகள் குறிப்பிடுகின்றன.
Qatar to ban single-use plastic bags
இதையும் படிங்க: கத்தாரில் கடும் உஷணம்! காலை 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!
எமது பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முகநூல் பக்கத்தை LIKE செய்து கொள்ளுங்கள் | கத்தார் தமிழ் |