கத்தாரில் புனித ரமழான் மாதம் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கான வேலை நேரத்தை கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி அரச அலுவலகங்களுக்கான பணிநேரம் காலை 9.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரையாகும் (5 Hours). மேலும் தனியார் நிறுவனங்கள் 6 மணித்தியாலங்கள் இயங்கும் என்பதாகவும், ஆரம்ப நேரம் மற்றும் முடிவு நேரங்கள் பற்றிய முடிவை அந்தந்த நிறுவனங்கள் அறிவிக்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விநியோக சேவைகள் மற்றும் ஒப்பந்தத் துறையைச் செய்யும் உணவுப் பொருட்கள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்களின் கடைகள் இந்த முடிவைப் பயன்படுத்துவதில் இருந்து விலக்கப்படுகின்றன. வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிற தேவையான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 800க்கு மேற்பட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது கத்தார் அரசு!