கத்தார் தேசிய தினப்பரிசு! போக்குவரத்து குற்றங்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி!

கத்தாரில் எதிர்வரும் 18ம் திகதி தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து துறையால் வாகன ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Traffic Violations Settlement Initiative என்ற பெயரில் போக்குவரத்து குற்றங்களுக்கு செலுத்த வேண்டிய அபராதத் தொகை 50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

குவிந்த போக்குவரத்து விதிமீறல்களினால் சிக்கியுள்ளவர்கள் தங்களது போக்குவரத்து அபராதங்களில் 50 விழுக்காட்டை மாத்திரம் செலுத்தினால் போதுமானது என்பதாகவும், அபராதங்களை Metrash2 ஊடாகவும் செலுத்திக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் போக்குவரத்துத் துறைப்  செயல் பொறுப்பாளர் Brigadier Muhammad Abdullah Al Shahwani அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் 2022ம் ஆண்டு முதல் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் பின்பற்றப்படவுள்ள நிலையில், தற்போது போக்குவரத்து அபராதங்களில் சிக்கியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் படி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த 50 சதவீத தள்ளுபடி காலத்தில் தங்களது போக்குவரத்து அபராதங்களை செலுத்த தவறுபவர்கள்,  இறுக்கான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும், இந்த போக்குவரத்து 50 சதவீத தள்ளுபடி சலுகையானது டிசம்பர் 18ம் திகதி முதல், 3 மாதங்கள் வரை நீடிக்கும்  என்பதாக போக்குவரத்து துறை செயல் பெறுப்பாளர் Brigadier Muhammad Abdullah Al Shahwani அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பழைய நாணயத்தாள்களை வைத்திருப்போருக்கு கத்தாரிலுள்ள வங்கிகள் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *