கத்தாருக்கு விசிட் வீசா மூலம் உறவுகளை அழைத்து வர இருப்போருக்கான தெளிவுகள் கத்தார் உள்துறை அமைச்சின் மக்கள் தொடர்புத்துறைப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் ZOOM செயலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தெளிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
கத்தார் உள்துறை அமைச்சின் மக்கள் தொடர்ப்புத் துறைப் பொறுப்பாளர் Lt Col Dr Saad Uwaidha Al Ahbabi அவர்கள் இது தொடர்பான விளக்கங்களை வழங்கினார். கத்தாரில் பணிபுரியும் ஒருவர் தங்களது குடுங்பங்களை, மற்றும் உறவினர்களை கத்தாருக்கு அழைத்து வருவதற்கான தேவைப்பாடுகள் பின்வருமாறு அமைய வேண்டும் என்பதாக அவர்கள் தெரிவித்தார்.
மனைவி குழந்தைகளுக்கான தனிப்பட்ட விசிட் வீசா | இதற்கு மெட்ராஸ் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவைப்பாடுகள்
- வீசாவுக்கான விண்ணப்ப படிவம்
- தொழில்வழங்குநரின் NOC கடிதம்
- நிறுவனத்தின் கணினி அட்டைப் பிரதி ( The company card)
- கத்தாருக்கு பயணிக்க இருப்பவரின் கடவுச்சீட்டுப் பிரதி
- விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவரின் கத்தார் IDப் பிரதி
- மருத்துவ காப்பீடு
- இருவழி விமான டிக்கட்
- உறவு முறையை உறுப்படுத்தும் ஆவணங்கள்
- குறைந்தளவு 5000 றியால்கள் சம்பளம்
ஏனைய உறவுகளுக்கான தனிப்பட்ட வருகை (சகோதரன்-சகோதரி-தாய்-தந்தை-மனைவியின் உறவினர்கள் – போன்றவை) இதற்கு மெட்ராஸ் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- வீசாவுக்கான விண்ணப்ப படிவம்
- தொழில்வழங்குநரின் NOC கடிதம்
- நிறுவனத்தின் கணினி அட்டைப் பிரதி ( The company card)
- கத்தாருக்கு பயணிக்க இருப்பவரின் கடவுச்சீட்டுப் பிரதி
- விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவரின் கத்தார் IDப் பிரதி
- மனைவி கத்தாரில் வசித்தால் அவரின் QID பிரதி
- உறவு முறையை உறுப்படுத்தும் ஆவணங்கள்
- குறைந்தளவு சம்பளம் 10 ஆயிரம் றியால்களாக காணப்பட வேண்டும் என்பதாக கத்தா் உள்துறை அமைச்சின் மக்கள் தொடர்த் துறைப் பொறுப்பாளர் Lt Col Dr Saad Uwaidha Al Ahbabi அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க : கத்தாரில் தங்கி வேலை தேடுபவரா நீங்கள்? பிரபல AL MEERA நிறுவனத்தில் வெற்றிடங்கள்!
Good news