கத்தாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிறமான நீர்நிலை (VIDEO இணைப்பு)

கத்தாரில் வடக்கு பகுதியில் இளஞ்சிவப்பு நிறமான நீர்நிலையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் சமூக தளங்களில் இந்த இளஞ்சிவப்பு நிறமான நீர்நிலை தொடர்பான பதிவென்று பதியப்பட்டு பின்னர் பல டுவிட்டர் பயநர்களால் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.

இவ்வாறு நீர் நிலையானது இளஞ்சிவப்பு நிறமாக மாறியமைக்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை. என்றாலும், கத்தாரின் சுற்றுச்சூழல் அமைச்சு அதிகாரிகள் மேற்படி நீர்நிலையிலிருந்து மாதிரிகளை பரிசோதனைக்கான எடுத்துச் சென்றுள்ளனர்.

Mohammad Abdul Mohsen Al Fayyad என்பவர் உரிய அதிகார சபைகளை குறிப்பிட்டு கீழ்வரும் வீடியோ டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சு உடனடியாக அதிகாரிகளை அனுப்பு பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

என்றாலும், கத்தாரில் மழை நீர்போதாமையின் காரணமாக உப்பு மற்றும் சூடு போன்றவை அதிகரித்தமையினால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்க கூடும் என்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி பெறத் தகுதியானவர்கள் யார் – சுகாதார அமைச்சு தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *