கத்தாரில் கொரோனா விதி முறைகளை மீறிய 1,143 பேர் மீது வழக்குத் தாக்கல்!

கத்தாரில் கொரோனா விதி முறைகளை மீறிய 1,143 பேர் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்குத் தாக்கல் (Violation) பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 789 முகக்கவசம் அணியாத குற்றத்திற்காகவும், 342 பேர் சமூக இடைவெளிகளைப் பின்பற்றாத குற்றத்திற்காகவும், 12 பேர் Ehteraz செயலியை பாவிக்காத குற்றத்திற்காகவும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளி பேணவும், வீட்டைவிட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணியவும், கத்தார் வாழ் அனைவரும் தங்களது கைப்பேசிகளில் Ehteraz தரவிறக்கம் செய்து பாவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கத்தாரின் 1990ம் ஆண்டு 17ம் இலக்க சட்டத்தின் படி தொற்று நோய் விதிமுறைகளை மீறுபவர்கள் மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனைக்கும், அல்லது, இரண்டு இலட்சம் கத்தார் றியால்கள் வரையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி விரைவில் ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *