கத்தாரில் தங்கம் கடத்த முயன்ற நான்கு ஆசிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாருக்கு வெளியே சட்ட விரோதமாக தங்கத்தை கடத்த முற்பட்ட வேளை மேற்படி நால்வரும் கத்தார் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்வனது செய்யப்பட்ட தங்க கட்டிகளை தூள்களாக அரைத்து அவற்றை கத்தாரிலிருந்து கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தாக அல் ஷமால் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பட்ட தகவலொன்றின் அடிப்படையில் ஒரு கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து தங்கக் கட்டிகளும், கொள்வனவு செய்யப்பட்டமைக்கான ரசீதுகள், மற்றும் அரைக்கும் இயந்திரங்கள் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதோடு, கத்தாரில் ஏதும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளை கண்டால் உள்துறை அமைச்சுக்கு அறிவிக்கும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.