வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு திரும்ப எதிர்பார்த்திருப்பவர்களுக்காக முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை கட்டாயம் தனிமைப்படுத்தல் ஹோட்டலை (Quarantine Hotel) முட்பதிவு செய்திருத்தல் அவசியம் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 60 ஹோட்டல்கள் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 02 ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கத்தாருக்கு பயணிக்க விரும்புவர்கள் 7 நாட்கள் காட்டாய தனிமைப்படுத்தலை சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.
கத்தார் திரும்ப விரும்புவர்கள் அனைவரும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் ஹோட்டல் முட்பதிவு செய்து அங்கு தங்கியிருத்தல் அவசியம் என்பதோடு, மேலும் 7 நாட்கள் தங்களது இருப்பிடங்களுக்கு சென்று 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விடுமுறையில் சென்றுள்ள கத்தார் IDயைக் கொண்டுள்ளவர்கள்
1. முதலில் SPECIAL RE-ENTRY PERMITக்கு விண்ணப்பிக்க வேண்டும்.(கட்டாயம் அச்செடுத்து கையில் வைத்திருந்தல் வேண்டும்)
2. கத்தாருக்கு பயணிக்க 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழைக் பெற்றிருத்தல்
3. விமான டிக்கட்டையும், தனிமைப்படுத்தல் ஹோட்டலையும் முட்பதிவு செய்தல்
4. மேற்படி அனைத்து அம்சங்களும் கத்தார் விமான நிலையத்தில் வைத்து பரிசோதனைசெய்யப்படும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவர்கள் உடனே தங்களது தாயகங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதாக கத்தார் டிஸ்கவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read This: கத்தாரின் இரண்டாவது Drive-Through கொரோனா தடுப்பூசிகள் மையம் வக்ரவில் திறந்து வைக்கப்பட்டது