எதிர்வு கூறப்பட்டது போல் இன்று கத்தார் முழுவதும் பரவலாக மழை வீழ்ச்சி!

Widespread rainfall across Qatar

அக்டோபர் 11, 2024 அன்று, கத்தார் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழையைக் பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.  இது நாட்டின் மழைக்காலத்தின் குறிப்பிடத்தக்க தொடக்கத்தைக் குறிக்கிறது.

சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (@qatarweather) கத்தார் முழுவதும் பல்வேறு மழை அளவுகளைக் காட்டும் தரவுகளை வெளியிட்டது.

அதன் படி Aldaayen பகுதியில் அதிக மழைப்பொழிவு  பதிவாகியுள்ளது, அங்கு  38mm மழை வீழ்ச்சி பெய்துள்ளது. கணிசமான மழையை அனுபவிக்கும் மற்ற பகுதிகளில் அல்சாட் 27.3 மிமீ, சிம்சிமா 25.8 மிமீ, மற்றும் இம்கைட்னா 22.4 மிமீ. மழை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. ஐன் ஸ்னான் 14.1மிமீ மழையும், தலைநகர் தோஹாவில் 2.9மிமீ மழையும் பதிவாகியுள்ளது. வாதி அல் பனாட் மற்றும் கத்தார் பல்கலைக்கழகப் பகுதி போன்ற வறண்ட பகுதிகளிலும் கூட 2.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை வீழ்ச்சியானது எதிர்வரும் நாட்களில் கத்தாரில் வெப்பநிலை குறைந்து குளிர் காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி என்பதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *