அங்கீகரிக்கப்படாத சூழ்நிலையில் விபத்து புகைப்படங்களை எடுப்பது தனியுரிமைச் சட்டங்களை மீறுவதாகவும், சட்டரீதியான விளைவுகளுக்கு உட்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் (MoI) எச்சரித்துள்ளது.
எனவே விபத்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வது தடைசெய்யப்பட்டுள்ளது. “சட்டங்களைக் கடைப்பிடிப்பது உங்கள் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது மற்றும் மற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கும்” என்று MoI தனது சமூக ஊடக பதிவின் தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 333 ஐ கத்தார் உள்துறை அமைச்சு மேற்கோள் காட்டியது, இது “மற்றொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டவிரோதமாக அவர்களின் அனுமதியின்றி ஊடுருவுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் ஈடுபட்டவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது QR10,000 க்கு மேல் அபராதம் விதிக்கப்படும். ” என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான 50 வீத தள்ளுபடி மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!