கத்தாருக்கு கஞ்சா போதைப் கடத்தும் முயற்சியை உள்துறை அமைச்சின் (MoI) மற்றும் கத்தார் சுங்க அதிகாரிகள் வியாழக்கிழமை முறையடித்து பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
MoI இன் போலீஸ் விசேட பிரிவு, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பார்சல்களை அடையாளம் கண்டு கஞ்சாவை மீட்டுள்ளது.
இந்த பார்சல்கள் மேலும் ஆய்வுக்காக ஹமாத் துறைமுகம் மற்றும் தெற்கு துறைமுகங்களில் உள்ள சுங்க அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய பார்சல்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே கருவியைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், மரப் பொருட்களின் குழிக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த எடை தோராயமாக 17 கிலோகிராம் என்பதை உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: வீட்டு வணிகத்தை ஊக்குவிக்க பதிவுக் கட்டணைத்தை 1500யிலிருந்து 300 ஆக குறைத்தது கத்தார்