குவைத்: குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் கருகி பலியாகி உள்ளனர். இவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர்; எஞ்சியவர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்கஃப் நகரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணிக்கு 6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடமானது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்குச் சொந்தமானது.
இக்கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதே பகுதியில் 200க்கும் அதிகமான தமிழர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் தங்கி இருந்தனர். ஆபிரகாமுக்குச் சொந்தமான கட்டிடத்தில் பற்றிய தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் மாடிகளில் தங்கியிருந்தவர் தீயில் சிக்கியும் மூச்சுவிட முடியாமலும் திணறினர். இத்தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் தமிழர்கள்; 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; வட இந்தியர்கள் 3 பேர் என முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தகவல்களின் படி மொத்தம் 40 இந்தியர்கள் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்; உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாமை உடனடியாக கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை துணை பிரதமர் Sheikh Fahd Al-Yousef நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ஆளுநர்களும் உடன் சென்றிருந்தனர்.
தற்போதைய நிலையில் படுகாயமடைந்த 21 பேர் Adan மருத்துவமனை, 6 பேர் Farwaniya மருத்துவமனை, 11 பேர் Mubarak மருத்துவமனை, 4 பேர் Jaber மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் குழுவையும் குவைத் அரசு அனுப்பி வைத்துள்ளது.
Also Read: கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!
Kuwait Fire Tragedy Update
#BREAKING: 53 people killed and 40 injured in a Mangaf building fire in Kuwait’s Southern Ahmadi Governorate. 5 among those killed are Indian. Indian Ambassador to Kuwait has left for the labour camp where fire erupted. Kuwait Govt orders massive demolition of illegal buildings. pic.twitter.com/P08oPG6iPO
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) June 12, 2024