கத்தாரிலுள்ளவர்கள் திங்கட்கிழமை இரவு சூபர்மூனைக் கண்டுகளிக்கும் முடியும் என்பதாக கத்தார் காலண்டர் ஹவுஸ் தெரிவித்துள்ளது. கத்தாரில் நாளை பெளா்னமி தினமாகும். வழக்கமாக தோன்று முழு நிலவை விட 14 மடங்கு பெரிதாக இம்முறை முழு நிலவு காட்சியளிக்கவுள்ளது. நிலவானது பூமிக்கு நெருக்கமாக வருவதனால் இது ஏற்பாடுவதாகவும், இம்முறை பூமியின் மையத்திலிருந்து 358,000 கீலோ மீற்றர் தூரத்திற்கு நிலவு நெருங்குவதாக கத்தார் காலண்டர் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கத்தார் காலண்டர் ஹவுஸ் வானியலாளர் Dr Bashir Marzouq அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, கத்தார் குடியிருப்பாளர்கள், சூபர்மூன் நிகழ்வை வெற்றுக் கண்களால் கண்டுகளிக்க முடியும். திங்கட்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்திற்கு சற்று முன் நேரம் வரை கண்டுகளிக்க முடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.