கத்தாரில் மூன்று சக்கரங்களுடன் முறைகேடாக வாகனம் செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தாரின் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து அந்த வாகனத்தை செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
முறையான வகையில் பொருத்தப்படாத முன்னால் உள்ள இடது பக்கச் சக்கரம், வாகனம் செல்லும் போது பாதையில் பட்டு நெருப்புப் பொறிகள் தெறிப்பது போன்று வீடியோ சமூக தளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து கத்தார் போக்குவரத்து ஆணையகம் உரிய வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, வாகன ஓட்டுநர் மீது பொருத்தமான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.