இம்மாத இறுதியுடன் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

Sri Lankan Airports to be closed due to fuel Crisis

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவல் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கூட தரையிறங்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் கடந்த மாதம் 9ஆம் திகதி ஊடறுப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழலிலேயே தற்போது விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Tamilwin)

Sri Lankan Airports to be closed due to fuel Crisis

இதையும் படிங்க: கத்தாரில் கடும் உஷணம்! காலை 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *