கத்தாரில் செம்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் சற்று தளர்வு!

2021ம் ஆண்டு செம்டம்பர் மாதத்துக்கான எரிபொருள் விலைகள் (September Fuel Price) இன்று நள்ளிரவு முதல்  நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் அறிவித்துள்ளது.  

ஆகஸ்ட் ஜுன் மாதத்தில் 2.05 றியால்களாக விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெற்றோல் 05 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு 2.00 றியால்களாகவும், மற்றும் 2.10 றியால்களாக விற்கப்பட்டு வந்த சூபர் பெற்றோல் 05 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு  2.05 றியால்களாகவும் விற்கப்பட இருக்கின்றன. மேலும், 1.95 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் விலை 10 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு 1.85 றியால்களாக விற்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் கொரோனா விதி முறைகளை மீறிய 1,143 பேர் மீது வழக்குத் தாக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *