கத்தாரில் 999 அவசர தொலைபேசிச் சேவையைப் பாவிப்போருக்கான முக்கிய அறிவித்தல்

Important News for the people who call 999 in Qatar

கத்தாரில் 999 அவசர தொலைபேசிச் சேவையைப் பாவிப்போருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் 999 அவசர சேவைக்கு வருகின்ற தொலைபேசி அழைப்புக்களில் 80 முதல் 85 சதவீதமானவை தேவையற்ற அழைப்புக்கள் என்பதாக கத்தார் தேசிய கட்டளை மையத்திக் இரண்டாம் நிலை லெப்டினன்ட் Ahmed Al Mutawa  அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சிறிய விபத்துச் செய்தி போன்றவற்றை முறையிட அதிகளவான அழைப்புக்களும் கிடைக்கப் பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கத்தார் வாழ் பொதுமக்கள் அத்தியவசியமற்ற அழைப்புக்களைத் தவிர்ந்து கொள்வதோடு, பெரிய காயங்களுடன் கூடிய விபத்துக்கள், தீ விபத்து சம்பவங்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், அத்துடன் கதவுகள் அடைபட்டு கட்டிடங்களுக்குள் சிக்கும் குழந்தைகள் போன்ற பெரிய சம்பவங்களை மாத்திரம் அழைத்து முறையிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கும் போது, அவசர நிலைகளின் போது பெறப்படும் அழைப்புக்கள், முதலில் வகைப்படுத்தப்படும். பின்னர், உரிய அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படும் என்றார்

காத்தார் தேசிய கட்டளை மையத்தில், இராணுவ அதிகாரிகள், சிவில்சேவை உழியர்கள் என பல வகையானவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும், முறைப்பாடுகளை,

  • அரபு
  • ப்ரென்ச்
  • ஆங்கிலம்
  • சீனமொழி
  • பிலிப்பீனே
  • பெர்சியன்
  • பஸ்டோ மொழி (ஈரானிய மொழி)
  • துருக்கி

போன்ற மொழிகளில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என்பதாக லெப்டினன்ட் Ahmed Al Mutawa  அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் உணவுப்பொருட்களின் உற்பத்தி நாடுகள் மாற்றி விற்பனை செய்த நிறுவனம் சிக்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *