கத்தாரில் நாளை தினம் காலையில் மூடுபனியுடன் கூடிய காலநிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது தெளிவற்ற தன்மையை ஏற்படுத்தும். மேலும் இந்த நிலைமையானது புதன், வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமை வரை தொடரக் கூடிய வாய்ப்பும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கத்தார் வானிலை ஆய்வுத் துறையின் (QMD) சமீபத்திய வானிலை புதுப்பிப்பின் படி, அதிகாலை மற்றும் இரவில் மூடுபனி உருவாகும் என்று கூறியுள்ளது. இதனால் பார்வைத் திறன் 2 கிலோமீட்டருக்கும் குறைவாகக் குறையும்.
இந்த காலநிலையின் போது பொதுமக்கள் அனைவரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.