இவ்வார இறுதி நாட்களில் கத்தாரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்திரம் – கத்தார் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கத்தாரின் சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்வரும் வார இறுதிய நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்யும் என்றும், நாளை ஒரு சிறிய வாய்ப்பு இருக்கும் என்றும் கத்தார் வானிலை ஆய்வு மையம் (QMD) முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாட்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
திணைக்களம் சமீபத்தில் இந்த வாரத்திற்கான பலத்த காற்று மற்றும் உயர் கடல் பற்றிய கடல் எச்சரிக்கையை தெரிவித்துள்ளது
மேலும் இந்த காலகட்டத்தில், கடல் அலைகள் சில நேரங்களில் 2-7 அடி முதல் 10 அடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் கடல் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
Read More: கத்தாரில் இந்த குற்றச் செயல்களை செய்து சிக்கினால் 5 இலட்சம் ரியால்கள் அபராதம், 20 வருடங்கள் சிறை