கத்தாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான 50 வீத தள்ளுபடி மேலும் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அபராதம் செலுத்துதல் மற்றும் வாகனம் வெளியேறுவதற்கான அனுமதிகள் குறித்த புதிய விதிகள் குறித்த உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, போக்குவரத்து விதிமீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது,
கத்தார் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் GCC குடிமக்கள் போன்ற அனைவரும், இந்த போக்குவரத்து மீறல் அபராதங்களில் 50% தள்ளுபடிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தள்ளுபடியானது ஜூன் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை பொருந்தும், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அதிகாரிக்காமல் பதிவுசெய்யப்பட்ட மீறல்களை உள்ளடக்கிதாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் அந்த வாய்ப்பானது மேலும் 90 நாட்களுக்கு நீடிக்கட்டுள்ளது. அதன்படி செம்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது,
வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த புதிய விதிகள் மற்றும் நடைமுறைகளை அமைச்சு கடந்த 2024.05.22ம் திகதியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Also Read: உலகின் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட 5 நாடுகளில் ஒன்றாக கத்தார் தேர்வு!