கத்தாருக்கு வாகன ஓட்டுநர்களாக வர எதிர்பார்த்திருப்போருக்கு கத்தார் உள்துறை அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது, வெளிநாட்டில் உள்ள கத்தார் விசா மையங்களில் வழங்கப்படும் ஓட்டுனர்களாக பணிபுரிய வரும் வெளிநாட்டினருக்கான கண் பரிசோதனை சேவை, போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் உரிம முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை உள்துறை அமைச்சகம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வந்தவுடன் மீண்டும் கண் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என்பதனை இது உறுதிப்படுத்துகின்றது. எனவே வாகன ஓட்டுநர்களாக வந்து உரிமம் பெற முயற்சிப்பட்டவர்கள் கண் பரிசோதனைக்கான பணத்தை கொடுத்து ஏமாற வேண்டியேற்படாது.
விசா மையம் என்பது வெளிநாட்டினரை நாட்டிற்கு வேலைக்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் நெறிப்படுத்துவதற்கும், கத்தார் அரசாங்கத்தினால் பணியாளர்களின் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன ஒரு சிறந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தார் – மசூதிகளின் சுற்றுச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் – அவ்காப் தெரிவிப்பு!