கத்தார் இந்த வார இறுதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாக கத்தார் வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், இந்த வார இறுதி வரை வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் அதன் சமூக ஊடகங்களில் வெப்ப அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புக்களை பகிர்ந்துள்ளது,
அவற்றில் சில அடங்கும்:
– ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் குளிர்ந்த நீரைக் குடிக்கவும்.
– தேநீர், காபி, எனர்ஜி பானங்கள் மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கவும்.
– வேலையின் போது அடிக்கடி வேலை இடைவெளிகளைத் திட்டமிடுங்கள்.
– சரியாக சாப்பிடுங்கள், லேசாக சாப்பிடுங்கள்.
– இலகுவான, தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
– வெளியில் செல்லும்போது தலையை மூடி வைக்கவும்.
அசாதாரண சிந்தனை அல்லது நடத்தை, மந்தமான பேச்சு, வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு உள்ளிட்ட மருத்துவ அவசரகால அறிகுறிகளைக் கவனிக்குமாறு தனிநபர்களுக்கு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை காணப்பட்டால், உடனடியாக 999ஐ அழைக்க வேண்டும். அத்தகைய நபரை உடனடியாக குளிர்ச்சியான பகுதிக்கு மாற்ற வேண்டும், மேலும் அந்த நபரின் உடலை தண்ணீர், ஐஸ் அல்லது மின்விசிறி மூலம் குளிர்விக்க வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.