நவம்பர் மாதம் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஃபீபா கால்ப்பந்து உலகக் கோப்யையை முன்னிட்டு கத்தார் புதிய நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.
கத்தார் மத்திய வாங்கியானது, கத்தார் ஃபீபா ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாகவுள்ள Supreme Committee for Projects and Legacyவுடன் இணைந்து 22 ரியால்கள் பெறுமதியைக் கொண்ட நாணையத்தாள் மற்றும் நாணயக் குற்றிகளையும் இன்று அறிமுகம் செய்துள்ளது.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் கத்தார் புதிதாக அறிமுகம் செய்துள்ள தேசிய சின்னமும், ஆரம்ப போட்டி நடைபெறவுள்ள அல் பைத் விளையாட்டரங்கும், மறு பக்கத்தில் இறுதி போட்டி நடைபெறவுள்ள லுசைல் விளையாட்டரங்கும் பொறிக்கப்பட்டுள்ளன.
புதிய நாணயமானது நாட்டில் கால்பந்தாட்ட வரலாற்றை பிரதிபலிக்கிறது மற்றும் நாட்டிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் உட்பட அதைப் பெற விரும்புவோருக்கு வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தார் விமான நிலையத்தின் பார்க்கிங் வசதிகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன