கத்தாரில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கான விசிட் வீசா, மற்றும் குடும்ப வீசா போன்றவற்றை எதிர்வரும் 12.07.2021ம் திகதி முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்தள்ளது.
கத்தாருக்கு பயணிக்க அல்லது திரும்ப விரும்புவர்கள் கத்தார் பொது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றியிருக்க வேண்டும் என்பதாகவும், உலகளவில் சுற்றுலா வீசாக்களை வழங்க கத்தார் உள்துறை அமைச்சு முடியும் செய்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாருக்கு நுழைபவர்கள், (வான், நிலம், கடல்வழி) உரிய தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும் உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : கத்தாரில் சட்ட விரோத விசா விற்பனைக்கு 50 ஆயிரம் றியால்கள் அபராதம் OR 3 வருடங்கள் சிறை!