வெளிநாடுகளிலிருந்து கத்தார் திரும்ப இருப்பவர்களுக்கு ஜுலை 12 முதல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் கத்தாருக்கு ஆகாயம், கடல், மற்றும் தரைமார்க்கமாக நுழைபவர்களுக்கு புதிய நடைமுறைகளை பின்பற்றவுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி கத்தாருக்கு வர இருப்பவர்கள் நாட்டுக்குள் நுழைய 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் தங்களை Ehteraz” செயலி மூலம் அல்லது website (WWW.EHTERAZ.GOV.QA மூலம் தங்களைப் பதிவு செய்து உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
அத்துடன் கத்தார் சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்ற, கத்தார் பிரஜைகள் மற்றும் குடியிருப்பார்கள் PCR பரிசோதனையை செய்திருத்தல் வேண்டும். கத்தாருக்கு பயணிக்க 72 மணித்தியாலங்களுக்குள் இது செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கத்தின் அடிப்படையில், 3 வகையாக பிரித்துள்ளது. அது பச்சை, மஞ்சல், மற்றும் சிவப்பு போன்ற நிறங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை நிறப் பட்டியலைக் கொண்ட நாடுகளுக்கு வேறு வேறான தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கத்தாருக்கான அனைத்து பயணிகளும், கொரோனா தொடர்பான கத்தார் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் தொடர்பில் தெளிவாக அறிந்திருத்தல் கட்டாயமாகும். மேலும் அறிவுறுத்தல்கள் முன்னறிவிப்பு இன்றி மாற்றப்படும் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் முகக் கவசங்களை அணிந்திருத்தல், கூட்டங்கூடுவதைத் தவிர்த்தல், போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு கரங்களை அடிக்கடி சனிடைசர் செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கத்தாரில் வெளிநாட்டவர்களுக்கு விசிட் வீசா வழங்கும் பணிகள் 12ம் திகதி முதல் ஆரம்பம்!