கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில், பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அல் முஜாதிலாஹ் (Al-Mujadilah) எனும் அறக்கட்டளை மூலம் இந்த பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் இயங்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியின் வரவேற்புரையை கத்தார் நாட்டின் ராணி ஷேகா மோஸா பின்த் நாசர் நிகழ்த்தி, பின் வருமாறு உரையாற்றினார்.
“பெண்களுக்கான இந்த பிரத்யேக பள்ளிவாசலில் தொழுகை, வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, பெண்களுக்கான சமூக முன்னேற்றம், வாழ்வியல் வழிகாட்டல் பயிற்சிகள், இஸ்லாமிய நெறிகளை வலுப்படுத்துதல், நூலகம் போன்றவை இடம்பெறும்.
இதில் அனைத்து வயது பெண்களும் பங்கேற்கலாம். கூடவே, தம் பங்களிப்பையும் அளிக்கலாம். இதில் கலந்து கொள்ள ஆர்வமுடைய பெண்கள் இங்கே விண்ணப்பிக்கலாம்.
தினசரி நிகழ்ச்சிகளாக அறிஞர்களுடனான அழகான விவாதங்கள், பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும்!”
நிகழ்ச்சியின் இறுதியில், அல்-முஜாதிலாஹ் அமைப்பின் நோக்கம் மற்றும் கட்டடத்தில் உள்ள பல்வேறு வசதிகள் காட்சிகளாக காண்பித்து, அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிரமுகர்கள், சமூக தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வி ஆய்வாளர்கள், அமைச்சகத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)