தர்பூசணிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 62 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள் கத்தார் சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், சுங்கத் துறையின் பொது ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் சுங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போது மேற்படி கஞ்சா போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. குறித்த கடத்தல் சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதிராக சுங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தார் விமான நிலையத்தில் பயணிகளின் உடல் மொழியைப் படிக்கவும், கடத்தல்காரர்கள் பின்பற்றும் சமீபத்திய முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், புதிய தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கூடைப்பந்து உலகக் கோப்பை 2027ஐ நடத்த தேர்வாகியது கத்தார்!