அண்மையில் பாலஸ்தீன் – இஸ்ரேலுக்கிடையில் நடைபெற்ற போரினால் சிதைவடைந்துள்ள காசா நகரின் மீள்புனரமைப்புக்கு கத்தார் அதிபர் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியானது சுகாதாரம், கல்வி மற்றும் மின்சார துறைகள் போன்றவற்றின் மீள்புனரமைப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கத்தார் அமீர் கருத்து தெரிவிக்கும் போது, ” நாம் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்வோம். சுதந்திர பாலஸ்தீனத்தை நிறுவுதலே அங்குள்ள எமது சகோதரர்களின் கனவாக உள்ளது. அதற்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்வோம் என்றார்.