கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி பெறத் தகைமையுடையவர்கள் தொடர்பாக கத்தார் சுகாதார அமைச்சு புதிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டொஸ் (Dose ) யினைப் பெற்று 6 மாதங்கள் பூர்த்தியானவர்கள் 3வது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களில் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று 8 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை சுகாதார அமைச்சினால் பின்பற்றப்பட்டு வந்தது. என்றாலும், தற்போது 6 மாதங்கள் பூர்த்தியானவர்கள் மூன்றாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று 5 மாதங்களில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றமை ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 8 மாதங்கள் என்ற காலம், 6 மாதங்கள் என்பதாக குறைக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் கொரோனா வைரஸுக் கெதிராக 90 சதவீதம் இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டும், அண்மைய நாட்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே கொரோனாவுக்கெதிரான சண்டை இன்று ஓயவில்லை என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிப்பதவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாமாகும். மேலும், கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் ஆரம்ப சுகாதார மருத்துவக் கழகங்களில், முற்பதிவுகளைப் செய்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், 40277077 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்து கொள்ள முடியும்.
பின்வரும் தகைமைகளைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
- தற்போது புற்றுநோயிற்காக தொடர் சிகிச்சை பெற்றுவரும் தனிநபர்கள்
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்கள்
- கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள்
- மிதமான அல்லது கடுமையான முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு கொண்ட நபர்கள்
- மேம்பட்ட HIV தொற்றுடையவர்கள்
- நாட்பட்ட நோயினால் பெறும் சிகிச்சை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி நலிவடைந்தவர்கள்
- ஆஸ்ப்லீனியா மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட நிலைமைகள் கொண்ட நபர்கள்
அத்துடன், இரண்டாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்று 6 மாதங்கள் நிறைவடைந்திருத்தல் வேண்டும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கத்தாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குளிர்கால சந்தை! உள்ளூர் காய்கறிகள் அமோக விற்பனை!