கத்தாரில் கோவிட் -19 வெப்ப திரையிடல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி கோவிட் -19 வெப்ப திரையிடல் செயற்பாடுகள் குறிப்பிட்ட பொது இடங்களில் மாத்திரம் நடைமுறையில் இருக்கும் என்பதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நில எல்லைகளில் மாத்திரம் கோவிட் -19 வெப்ப திரையிடல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்பதாகவும், இது தவிர்ந்த பொது இடங்களில் இனிவரும் காலங்களில் வெப்ப திரையிடல் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதாகவும் அமைச்சு டுவிட்டுரில் பதிவிட்டுள்ளது.
மேலும் கத்தாரில் கொரோனா காரணமாக இடப்பட்ட தடைகளை நீக்கும் படிப்படியான 4ம் கட்ட தளர்வுகளின் நடைமுறையில் இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்புக்கள் கடந்த சில வாரங்களாக மிகவும் குறைவடைந்துள்ளது எனவும், கத்தாரின் பொது இடங்களில் நுழைய Ehteraz செயலியில் ஆரோக்கிய குறியீடான பச்சை நிறம் அவசியம் என்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் அக்டோபர் 10ம் திகதி முதல் ஆரம்பம்!