கத்தாரில் இன்றும் (அக்-04) நாளையும் (அக்-05)ம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கத்தாரின் நாளாந்த காலநிலை தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்றிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி அறிவித்தலில் அக்டோபர் 4ம் திகதி முதல் 5ம் திகதி வரை கடும் காற்றுடன் கூடிய நிலவும் எனவும், கடுமையான காற்றின் காரணமாக கடலலைகள் 7 அடி வரை உயரக் கூடும் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கடும் காற்றுடன் கூடிய நிலைமையினால், இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடலை அண்மித்து இருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
It is expected that a marine warning with thunder rain accompanied by strong winds with high waves will start from tomorrow Monday until Tuesday 5/10/2021 and the wind will be mainly Northeasterly light to moderate gusting to 25 KT with thunder rain and the wave will rise to 7 Ft pic.twitter.com/Ui4ln8Tv62
— أرصاد قطر (@qatarweather) October 3, 2021