Qatar NewsQatar Tamil News

கத்தாரில் நோன்புப் பெருநாள் மார்ச் 30 திகதி கொண்டாடப்படும் – உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானது

கத்தாரில் நோன்புப் பெருநாள் மார்ச் 30 திகதி கொண்டாடப்படும் என்பதாக உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரின் பிறைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கத்தார் பிறை கமிட்டி இன்றைய தினம் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இதன் படி பெருநாள் தொழுகை நாளைய தினம் 5.43 நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கத்தாரில் 2025ம் ஆண்டுக்கான நோன்பு பெருநாள் தொழுகைகக்காக 690 மசூதிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகளைத் தவிர்ந்து பொதுப்பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் மற்றும் முக்கிய சுற்றுலா புள்ளிகளும் (picnic points) நோன்பு பெருநாள் தொழுகைக்காக தயார் செய்யப்பட்டுள்ளதாக அவ்காப் அறிவித்துள்ளது.

நோன்பு பொருநாள் தொழுகைக்கான உத்தியோக பூர்வ நேரமாக அதிகாலை 5.43 அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் ஒவ்வொரு முக்கிய நகரிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மசூதிகளும், மேலதிகமாக தைானங்கள் தொழுகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மசூதிகளின் பட்டியலுக்கு – கிளிக் செய்க!

அனைவரும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Also Read: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகைகக்காக 690 மசூதிகள் தயார் நிலையில்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button