ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index) உலகின் பலம் வாய்ந்த கடவுச் சீட்டுக்கள் 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கத்தார் 46 இடத்தைப் பெற்றுள்ளது.
உலகின் 199 நாடுகளின் கடவுச் சீட்டுக்களுடன் ஒப்பிடும் போதே கத்தார் இந்த இடத்தைப் பெற்றுள்ளது. கத்தார் கடந்த ஆண்டு 2023ம் ஆண்டின் படி 55 இடத்தைப் பெற்றிருந்தது. இந்த வருடம் 9 இடங்கள் முன்னேறி 46 இடத்தைப் பெற்றுள்ளது,
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், நாடு முறையே 57வது, 54வது, 60வது மற்றும் 57வது இடத்தைப் பிடித்திருந்தது.
2024ம் ஆண்டு தரவரிசையி்ன படி GCC நாடுகளில், உலகளாவிய தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள UAE க்கு அடுத்தபடியாக கத்தார் இரண்டாவது இடத்தில் உள்ளது. குவைத் 49வது இடத்திலும், சவுதி அரேபியா 56வது இடத்திலும், பஹ்ரைன் 57வது இடத்திலும், ஓமன் 58வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டுக்கான பலமான கடவுச் சீட்டுக்கள் பட்டியல் CLICK HERE
Also Read: கத்தாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான 50 வீத தள்ளுபடி ஆகஸ்ட் 31ம் திகதியுடன் நிறைவு பெறும்!