கத்தாரில் தனது 10 வருட சேவையை முடித்துக்கொள்ளும் பிரபல உணவு டெலிவரி நிறுவனம்!

Carriage to shutdown in Qatar

கத்தாரின் பிரபல உணவு விநியோக சேவை நிறுவனமான Carriage Qatar தனது சேவைகளை எதிர்வரும் மாதம் முதல் நிறுத்திக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூன் 25, 2023 அன்று கத்தாரில் Carriage Qatar தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் என தெரியவருகிறது.

இது தொடர்பாக Carriage Qatar ஆனது தனது சமூக வலைதளங்களில் பதிவினை இட்டு தெரியப்படுத்தியுள்ளது. அதில் இந்த நேரத்தில் எங்கள் ஊழியர்கள், ரைடர்ஸ், உள்ளூர் கடைகள் மற்றும் உணவக கூட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதே எங்கள் முக்கிய முன்னுரிமை என்பதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் Carriage  டெலிவரி சேவையில் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான உணவகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சொண்டு விற்பனை நிலையங்கள், என்பதுக்கும் மேற்பட்ட சில்லறை வியாபார கடைகள்(பலசரக்கு கடைகள்),  நாற்பதுக்கும் மேற்பட்ட வாசனைத்திரவியங்கள் விற்கும் கடைகள் போன்றவற்றின் பொருட்களை உரிய வாடிக்கையாளர்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Also Read: 100 சதவீதம் இலத்திரணியல் மயப்படுத்தப்படும் கத்தார் – சவுதி எல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *