கத்தாரில் தரைமட்டமாக்கப்படவுள்ள பிரபல கலாச்சார கோபுரம் | The Pigeon Towers (Video)

கத்தாரின் பிரபல கலச்சார கிராமத்தில் அமைந்துள்ள கோபுரமான The Pigeon Towers தரைமட்டமாக்கப்படவுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 16ம் திகதி (நாளை – புதன்கிழமை) கத்தாரின் கலாச்சார கிராமம் என அழைக்கப்படும் கதாராவில் (Katara) அமைந்துள்ள பிரபல The iconic Pigeon Towers தரைமட்டமாக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கதாராவின் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, பெப்ரவரி 16ம் திகதி தரைமட்டமாக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மீள கட்டியமைகப்படவுள்ளது என்பதாக தெரிவித்தார்.

கலாச்சார நகராமான கதாராவில் மூன்று கோபுரங்கள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஏனைய இரண்டும் கடலுக்கு அருகாமையில் கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

ஆயிரக் கணக்கான புறாக்களின் தங்குமிடமாக மேற்படி கோபுரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *