கத்தாரின் பிரபல D RING விதியில் புதிய சுரங்கவழி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பொதுப் பணிகள் அதிகார சபை (Ashghal )யானது, Al Tadamon இன்டர்செக்சன் என அறியப்படும், Fereej Al Ali சுற்று வட்டத்திலேயோ இந்த சுரங்கப் பாதை திறந்து வைத்துள்ளது.
இந்த சுரங்கவழி திறக்கப்பட்டதன் மூலம் D RING பாதைக்கும், டோஹா அதிவேகப் பாதைக்கும் இடையிலான 70 வீதமான வாகன நெறிசல் குறைவடையும் என்பதாகவும், அல் – நஜ்மா, அல்-ஹிலால், பழைய விமான நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள், கல்வி நிலையங்கள், வா்த்தக நிலையங்கள் மற்றும் வைத்திய நிலையங்கள் போன்றவர்கள் அதிக பயனடைவார்கள் என்பதாக பொதுப் பணிகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பாதையின் இரு பகுதிகளிலும் தலா 4 வாகனங்கள் பயணிக்கும் வகையில் சுரங்களைப் பாதை அமைக்கப்பட்டுள்ளதாலும், மணித்தியாலத்திற்கு 12 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரையான வாகனங்கள் கடக்க முடியும் என்பதாக Ashghal நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கத்தாரில் இன்று (பெப்-12) முதல் திறந்த பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயமில்லை