கத்தாரின் தேசிய தினம் டிசம்பர் 18ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசிய தின நிகழ்வுகள் கத்தார் முழுதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கத்தார் தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கத்தாரின் தேசிய தினத்தை பிரதிபலிக்கும் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 18ம் திகதி தேசிய அணிவகுப்பு நிகழ்வுகள் கொ்னிச் கடற்கரைப் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல் வக்ரா பழைய சந்தையின் தேசிய தின நிகழ்வுகள், எதிர்வரும் 14ம் திகதி முதல், 18ம் திகதி வரை மாலை 3.30 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். மேற்படி சந்தையில் பின்வரும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தியட்டர் காட்சிகள்
- பிளாஸ்டிக் கலைப் பொருட்கள் காட்சி
- ஒட்டக சவாரி
- படகோட்டம்
- கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சிகள் உட்பட பல கண்கவர் போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அஸ்பெயர் பூங்காவின் (Aspire Park) தேசிய தின நிகழ்வுகளும் எதிர்வரும் 14ம் திகதி முதல், 18ம் திகதி வரை மாலை 3.30 முதல் இரவு 10 மணி வரை நடை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு கத்தாரின் கலை கலாசரங்களைப் பிரதிபலிக்கும் பல நிகழ்வுகளும், போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
கத்தார் பவுன்டேசன் (Qatar Foundation) யினது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை 17ம் திகதி வரை தொடரவுள்ளன.
அத்துடன் தற்போது கத்தாரில் 2021ம் ஆண்டுக்கான அரபுக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 18ம் திகதி தேசிய தினமன்று இறுதிப் போட்டிகள் நடத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு தேசிய தின நிகழ்வுகள் கத்தார் வாழ் அனைவரும் ஒரு மிக மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க : கத்தார் தேசிய தினப்பரிசு! போக்குவரத்து குற்றங்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி!