கத்தாரில் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காத 314 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 1ம் திகதிக்கும், நவம்பர் மாதம் 15ம் திகதிக்கும் இடையில் தொழிலாளர்களின் உரிமைகளை மீறிய நிறுவனங்கள் மீதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்கள், ஒப்பந்தம் மற்றும் பொது சேவைகள் துறை போன்றவற்றை சேர்ந்தவைகளாகும். தொழிலாளர் சட்டத்தின் 66ம் இலக்க சட்டத்தின் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட 2015ம் ஆண்டின் 1ம் இலக்க சட்டத்தின் படி பணியாளர்களது சம்பளங்களை வழங்க தாமதித்தல், மற்றும் சம்பளத்தை வழங்காதிருத்தல் போன்ற விதிமீறல்களில் மேற்படி நிறுவனங்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உரிமை விடயத்தில் கத்தார் தொழிலாளர் அமைச்சு தொடர்ந்து கண்காணிப்புக்களை செலுத்தும். மேலும், தொழிலாளர்களின் உரிமைகளை வழங்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகளை தொழிலாளர் அமைச்சு எடுக்கும் என்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்துக்கது.
இதையும் படிங்க : கத்தார் சுரங்கப் பாதையொன்றில் சாகசம் காட்டிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!