கத்தாரின் திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் இன்று முதல் (அக்டோபர் 03) முகக் கவசம் கட்டாயமில்லை என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் கத்தாரின் படிப்படியான திட்டத்தின் அடிப்படையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ் வரும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளன.
1. திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. என்றாலும் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்வுகள், சந்தைகள், கண்காட்சிகள் போன்றவற்றில் முகக் கவசம் அணியும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மசூதிகள், பாடசாலைகைள், வைசத்தியசாலைகள் மற்றும் பல்கலைக்கழக வளகம் போன்ற இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை முழுமையாக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் உணவுப் பொருட்கள் விற்கப்படும் பகுதிகளுக்கான அனுமதி 50 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்காடிகளில் உள்ள தொழுகையறைகள், உடைகளை சரிபார்க்கும் அறைகள் போன்றவைகளும் திறக்கப்பட்டுள்ளன.
3. அருங்காட்சியகங்கள் மற்றும் பொது நூலகங்கள் போன்றவை முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.
4. அரச மற்றும் தனியார் ஊழியர்கள் முழுமையாகப் பணிக்கு திரும்புவார்கள். அவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அன்டீஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
5. “Qatar Clean”யின் கீழ் இயங்கும் வெளிப்புற உணவகங்கள், மற்றும் கேபேக்கள் முழுமையாகவும், “Qatar Clean”யின் இயங்காதவைகள் 50 விழுக்காடுகளும் என்ற அடிப்படையில் திறக்கப்படும்.
6. “Qatar Clean”யின் அடிப்படையில் இயங்கும், உள்புற உணவகங்கள் மற்றும் கேபேக்கள் 75 சதவீத விழுக்காடு என்ற வகையிலும், “Qatar Clean”யின்யில் இயங்காதவைகள் 40 விழுக்காடு என்ற அடிப்படையிலும் திறக்கப்படும்.
7. அனைத்து உணவக மற்றும் கேபே ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாமென்பதோடு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்களது குடும்பத்துடன் அனுமதிக்கப்படுவார்கள்.
8. பாடசாலை மாணவர்கள் இன்று முதல் முழுமையாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்
கத்தாரில் கொரோனா நோயார்கள் தொகை சடுதியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. என்றாலும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உரிய கொரோனா கட்டுப்பாடுகள் சுயமாக பின்பற்றுதல் எமக்கும், எமது உறவுகளுக்கும் சிறந்ததாகும் என்பதை கத்தார் தமிழ் சார்பார ஞாபகப்படுத்த விரும்புகிறோம். (நன்றி)
இதையும் படிங்க :கத்தாரில் மசூதிகளில் OCT 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் கிடையாது