முறையான உரிமம் இன்றி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆசிய நாட்டவர் ஒருவர் கத்தார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சின் பொது விசாரணை இயக்குனரகத்தில் உள்ள பொருளாதார மற்றும் சைபர் குற்றத் துறைப் பிரிவினால் முறையான உரிமம் பெறாமல், முதலீடு மற்றும் நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த ஆசிய நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறையினக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், மேற்படி நபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தேடுதல் நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து பெருந்தொகையான கத்தார் நாணத்தாள்கள், உட்பட வெளிநாட்டு நாணயத்தாள்களும் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சொகுசுக் கார்கள், விலையுயர்ந்த குடியிருப்பு அலகுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்படி நபர் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முறையான வீசா அனுமதியின்றி கத்தாரில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உள்துறை அமைச்சின் அறிவித்தல்