கத்தாரில் ON ARRIVAL VISA நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிப்பு!

கத்தாருக்கு வீசாயின்றி பயணிக்கும் நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கு வீசாயின்றி பயணித்து கத்தார் விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்ளும் அனுமதியை (Visa free arrival  or On Arrival Visa) கத்தார் இதுவரை 82 நாடுகளுக்கு வழங்கி வந்தது. அந்த வரிசையில் லெபனான் பிரஜைகளும் வீசாயின்றி பயணித்து கத்தார் விமான நிலையத்தில் வீசாக்களைப் பெற்று கத்தாருக்கும் நுழைய முடியும் என்பதாக கத்தார் அறிவித்துள்ளது.

லெபனான் பிரஜைகள் கத்தார் விமான நிலையத்தில் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு தேவைப்படும் பட்சத்தில் மேலும் 30 நாட்களுக்கு நீடித்துக் கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாருக்கு ON ARRIVAL VISA முறையில் பயணிக்க விரும்புவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1. குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் நிலையில் உள்ள கடவுச்சீட்டு
2. தாயகம் திரும்ப உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கட் (A confirmed return ticket)
3. கத்தாரில் தங்குவதற்கு முற்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் பதிவு
4. கத்தார் சுகாதார அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்று 14 நாட்கள் கடந்திருத்தல்
5. கத்தாருக்கு பயணிக்க 72 மணித்தியாலங்களுக்கு எடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் மறைச் சான்றிதழ்
6. ஆன்லைனில் மூலம் WWW.EHTERAZ.GOV.QA யில் தங்களைப் பதிவு செய்திருத்தல் அவசியம் என்பதாகவும் கத்தார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தார் ON ARRIVAL VISA  வீசாக்களைப் பொறுத்த வரை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

Qatar On Arrival Visa 2021

முதல் வகை

வழங்கப்பட்ட நாளிலிருந்து 180 நாட்கள் செல்லுபடியாகும் வீசா. இந்த வீசா வகை நீடிக்க முடியாததாகும். இவை 38 நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.

நாடுகள் விபரம்.

1. Antigua and Barbuda,
2. Armenia,
3. Austria,
4. Bahamas,
5. Belgium,
6. Bulgaria,
7. Croatia,
8. Cyprus,
9. Czech Republic,
10. Denmark,
11. Dominican Republic,
12. Estonia,
13. Finland,
14. France,
15. Germany,
16. Greece,
17. Hungary,
18. Iceland, Italy,
19. Latvia,
20. Liechtenstein,
21. Lithuania,
22. Luxembourg,
23. Malaysia,
24. Malta,
25. Netherlands,
26. Norway,
27. Poland,
28. Portugal,
29. Romania,
30. Serbia,
31. Seychelles,
32. Slovakia,
33. Slovenia,
34. Spain,
35. Sweden,
36. Switzerland,
37. Turkey,
38. Ukraine

இரண்டாம் வகை

வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் செல்லுபடியாகும் வீசா. இந்த வீசாக்களை மேலும் 30 நாட்கள் வரை நீடித்துக்கொள்ளலாம். இவை 45 நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.

நாடுகள் விபரம்

  1. Andorra,
  2. Argentina,
  3. Australia,
  4. Azerbaijan,
  5. Belarus,
  6. Bolivia,
  7. Bosnia and Herzegovina,
  8. Brazil,
  9. Brunei,
  10. Canada,
  11. Chile,
  12. China,
  13. Colombia,
  14. Costa Rica,
  15. Cuba,
  16. Ecuador,
  17. Georgia,
  18. Guyana,
  19. Hong Kong – China,
  20. Indonesia,
  21. Ireland,
  22. Japan,
  23. Kazakhstan,
  24. Lebanon,
  25. Maldives,
  26. Mexico,
  27. Moldova,
  28. Monaco,
  29. North Macedonia,
  30. New Zealand,
  31. Panama,
  32. Paraguay,
  33. Peru,
  34. Russia,
  35. San Marino,
  36. Singapore,
  37. South Africa,
  38. South Korea,
  39. Suriname,
  40. Thailand,
  41. United Kingdom,
  42. United States,
  43. Uruguay,
  44. Vatican City
  45. Venezuela

இதையும் படிங்க : கத்தாரின் தற்போதைய மொத்த சனத்தொகை எவ்வளவு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *