கத்தார் ஏர்வெய்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையில் பயணிப்பவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக Face-Shieldகளை அணியத்தேவையில்லை என்பதாகவும், அதற்கு பதிலாக Face-Maskகளை அணிந்தால் போதுமானது என்பதாக தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையில் பயணிக்க Face-Shield கட்டாயம் என்பதாக பரவும் செய்தி தொடர்பாக விளக்கம் அளிக்கும் போதே கத்தார் ஏர்வெய்ஸ் நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பதிவில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையானது பிரயாண விதிமுறைகளை இற்றைப்படுத்தியுள்ளதாகவும், அதில் கட்டாயம் Face-Shield அணிந்திருக்க வேண்டும் என்பதாக பகிரப்பட்டிருந்தது.
மேற்படி சமூக வலைதளப் பதிவானது போலியானதாகும், கத்தார் ஏர்வெய்ஸ்ஸில் பயணிப்பவர்கள் Face-Shield அணியத் தேவையில்லை. அதற்கு பதிலாக Medical Mask களைப் பாவித்தால் போதுமானது. அத்துடன் பயணிகள் தங்களுக்கு ஏற்ற Face-Maskகளை தாங்களே கொண்டு வர முடியும் கத்தார் ஏர்வெய்ஸ் என்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சர்வதேச விமானச் சேவையை ஆரம்பித்த தலிபான்கள், கத்தாருக்கு முதல் விமானம் பயணிமாகியது