Hot Whether in Qatar | எதிர்வரும் நாட்களில் கத்தாரில் வெப்பநிலையானது 50 பாகையை அண்மிக்கும் என்பதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது கத்தாரில் வெப்பநிலையானது 34 பாகைக்கும் 47 பாகைக்கும் இடையில் காணப்படுகின்றது. என்பதாகவும் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையானது 50 பாகையை நெருங்கும் என்பதாக கத்தார் வானலை அவதான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த வெப்பநிலையில் சூரிய ஒளியானது உடல்களில் நேரடியாக படும் போது மயக்கநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது சூடு காலங்களில் பொதுவாக ஏற்படும் ஒன்று என்பதால் பொது மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இது போன்ற மயக்கநிலை ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
1. கறுப்பு நிற மற்றும் தடித்த ஆடைகளை அணிவதைத் தவிர்த்தல்
2. வெளியில் சுற்றித்திரிவதை குறைத்துக் கொள்ளல்
3. பொது வெளியில் சூரிய திரை கொண்ட குடைகளைப் பாவித்தல்
4. போதுமான அளவு தன்னீரைப் பருகுதல்.
5. குளிர்ந்த நீரில் குளித்தல்
போன்ற விடயங்களைப் பின்பற்றும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Hot Whether in Qatar)
இதையும் படிங்க: கத்தாரில் வசிப்போருக்கு உள்துறை அமைச்சின் எச்சரிக்கைச் செய்தி