வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்த முதல் மத்திய கிழக்கு நாடு கத்தார் : ILO புகழாரம்

கத்தாரில் பணி புரியும் சகல ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால்கள் நிர்ணயிக்கப்பட்பட்டு, இந்த சட்டமானது கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச தொழில் அமைப்பின் கத்தாருக்கான அலுவலகம் (ILO Project Office for the State of Qatar)  இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது..

இதன் பிரகாரம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்த முதலாவது மத்திய கிழக்கு நாடாக கத்தார் திகழ்கிறது. இந்த சம்பள முறைமை கத்தாரில் பணியாற்றும் சகல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் உரித்தாகும். நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பணியாற்றுபவர்களும் இந்த சம்பளக் கட்டமைப்பில் உள்வாங்கப்படுவார்கள் என்பதாக சர்வதேச தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால்கள் வழங்குவதுடன், தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த வசதிகளை வழங்காதுவிடத்து, அதற்காக மேலதிக கொடுப்பனவுகளை ஒதுக்க வேண்டும் என்றும் சர்வதேச தொழில் அமைப்பின் கத்தாருக்கான அலுவலகம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புதிய சம்பள திருத்தத்தின் படி,

  • அடிப்படைச் சம்பளமாக 1000 றியால்களும்,
  • இலவச தங்குமிடம் அல்லது தங்குமிட கட்டணம் 500 றியால்களும்,
  • இலவச உணவு அல்லது உணவிற்கான கட்டாணமாக 300 றியால்களும் வழங்கப்பட வேண்டும் என்பதாக தெரிவித்துள்ளது.

கத்தாரின் இந்த சட்டத்தின் மூலமாக 4 இலட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் என்பதாகவும், தனியார் துறைப் பணியாளர்களில் இது 20 விழுக்காடு ஆகும் எனவும் சர்வதேச தொழில் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *