கத்தாரில் கொரோனாவின் 2ம் அலை! எதிர்வரும் நாட்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் – தலைமை வைத்தியர் தகவல்!

Dr Abdullatif Al Khal,
தற்போது கத்தாரில் அதிகாரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று  அடுத்த வரும் 10-14 நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என்பதாக தலைமை வைத்தியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த நாட்களில், COVID-19 நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு செல்கிறது. கடந்த 7 நாட்களில் 7 பேர் கொரோனாவினால் மரணித்துள்ளனர் என்பதாக கத்தார் தேசிய சுகாதார மூலோபாயக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லாதீப் அல் கல் அவர்கள் தெரிவித்தார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் கொரோனா பற்றி கருத்து தெரிவிக்கும் போது, “கடந்த இரண்டு வாரங்களாக, COVID-19 நிலைமை மோசமாகிவிட்டது அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர், மற்றும் கடுமையான நோய்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரித்துள்ளது. இது கத்தாரில் கொரோனாவின் இரண்டாவது அலையாகும். இப்போது ஒவ்வொரு நாளும் 500 க்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். அடுத்து வரும் 10 முதல் 14 நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.
கொரோனா இரண்டாவது அலைக்கான காரணம் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காதது தான். முறையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டாலும், மேற்கத்தேய நாடுகளைப் போல் கத்தாரில் பல புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கத்தாரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி நாடுகளிலிருந்து கத்தாருக்கு திரும்பிய பயணிகளே இந்த தொற்று கத்தாரில் பரவியுள்ளது. மேலும் இந்த புதிய வகை கொரோனா தொற்றுக்கள் சமூகத்தில் பரவாமலிருக்க புதிய வகையான கட்டுப்பாடுகள் நாளை முதல் (மார்ச்-26) விதிக்கப்படுகின்றன.
அனைவரும் ஒன்றினைத்து கொரோனா கட்டுப்பாடுகளை சரிவர பின்பற்றினால் கத்தாரில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை வெற்றிகொள்ள முடியும் என்பதோடு, எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் மாதத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்பதாக தலைமை வைத்தியர் தலைவர் டாக்டர் அப்துல்லாதீப் அல் கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply