கத்தாரிலுள்ள தனியார் மருத்துவ சேவைகளை நிறுத்த அமைச்சரவை அதிரடி உத்தரவு!

கத்தாரிலுள்ள தனியார் மருத்துவ சேவைகளை நிறுத்த அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கத்தாரின் பிரதமரும், உள்துறை அமைச்சரும்மான காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தலையில் இன்றைய (31.03.2021) தினம் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவதாவது, கொரோனா முன்னெச்சரிக்கையின் ஒரு அங்கமாக தனியார் சுகாதார மையங்களில் நடைபெறும் மருத்துவ சேவைகளை நிறுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது. என்றாலும் அவசரகால வழக்குகள் (Emergency Cases) இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்02) திகதி முதல் பின்பற்றப்படவுள்ளது.

கத்தாரில் கடந்த இரு வாரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கபல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 26ம் திகதி முதல் கத்தார் பின்பற்றி வருகின்றது. அந்த வரிசையில் கொரோனாவிலிருந்து  பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தனியார் சுகாதார மையங்களில் வழங்கப்படும் சுகாதார சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply